வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2024 (09:04 IST)

ரஜினி பேட்மேன்.. கமல் சூப்பர் மேன்.. விஜய்..? – லோகேஷ் கனகராஜின் கனவு சூப்பர்ஹீரோக்கள்!

சூப்பர்ஹீரோ படங்களை இயக்கினால் யார் யாரை எந்த சூப்பர் ஹீரோவாக நடிக்க வைப்பீர்கள் என கேட்ட கேள்விக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில் அளித்துள்ளார்.



காமிக் கான் இந்தியா நடத்தும் காமிக் கான் நிகழ்ச்சி இந்தியாவில் பெங்களூர், மும்பை, ஹைதராபாத் என பல பெருநகரங்களில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில் முதன்முறையாக சென்னையில் காமிக் கான் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

இதில் வெளியிடப்பட்ட “எண்ட் வார்” என்ற காமிக்ஸ் புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அப்போது தனது காமிக்ஸ் நினைவுகள் குறித்து அவர் பேசியபோது, ஒரு வேளை நீங்கள் சூப்பர் ஹீரோ படங்கள் எடுத்தால் யாரை எந்த சூப்பர்ஹீரோவாக நடிக்க வைப்பீர்கள் என கேட்டபோது, பதிலளித்த அவர் “பேட்மேனாக ரஜினிகாந்த், சூப்பர்மேனாக கமல்ஹாசன், அயர்ன் மேனாக விஜய், ஜோக்கராக எஸ்.ஜே.சூர்யா, ஹேர்லி குயினாக ராஷ்மிகா மந்தனா, வுல்வரினாக அர்ஜுன், ஸ்பைடர்மேனாக பகத் பாசில் ரோர்ஸ்சாச்சாக விஜய் சேதுபதி உள்ளிட்டோரை நடிக்க வைக்கலாம்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K