வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (10:47 IST)

ஜூன் 19ல் அமெரிக்கா செல்கிறாரா ரஜினிகாந்த்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அவர் அமெரிக்கா செல்வதற்கான தனி விமானத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதனை அடுத்து ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் அமெரிக்கா செல்வார்கள் என்று கூறப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ஜூன் 19ஆம் தேதி தனி விமானத்தில் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்கா செல்லும் ரஜினி தனது உடல்நிலையை பரிசோதனை செய்துகொள்வார் என்றும் அங்கு அவர் மூன்று மாதங்கள் தனது குடும்பத்தினருடன் தங்கி இருப்பார் என்றும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோர் அமெரிக்காவில் தான் உள்ளனர் என்பதால் ரஜினிகாந்தின் உடல் பரிசோதனைக்கு அவர்கள் உதவி செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்பதும் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட டப்பிங் பணிகளும் முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது