1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : சனி, 24 ஜூன் 2017 (18:48 IST)

உலகச் சுற்றுலா போகும் ரஜினி படம்

ரஜினி நடித்துள்ள ‘2.0’ படம், புரமோஷனுக்காக உலகம் முழுவதும் சுற்றிவர இருக்கிறது.





உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது ‘பாகுபலி’. வசூலும் படு பயங்கரம். இதனால், கிட்டத்தட்ட அதே செலவில் உருவாகியிருக்கும் ‘2.0’ படத்தையும், உலகம் முழுவதும் வெளியிட முடிவு செய்துள்ளது லைகா நிறுவனம். சரித்திரப் படங்களுக்கே உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கும்போது, எல்லோருக்கும் தெரிந்த டெக்னாலஜி படம் நிச்சயம் எடுபடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

ரஜினி, ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடித்துள்ள இந்தப் படம், அடுத்த வருடம் ஜனவரி மாதம் தான் ரிலீஸாகப் போகிறது. ஆனால், படத்திற்கான புரமோஷனை இப்போதே ஆரம்பித்து விட்டனர். விரைவில், உலகம் முழுவதும் சுற்றிவரப் போகிறது ‘2.0’.