ரஜினியின் அடுத்த பட ஹீரோயின் இவர்தான்....


Murugan| Last Modified புதன், 17 மே 2017 (11:20 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

 
இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. படத்தின் டப்பிங் வேலைகளையும் ரஜினி முடித்து கொடுத்து விட்டதாக தெரிகிறது. தற்போது அவர், ப.ரஞ்சித் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். 
 
மும்பையை அடிப்படையாக கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக சென்னையில் மும்பை போன்று செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் பெரும்பாலான காட்சிகள் படம்பிடிக்கப்படும் எனத் தெரிகிறது. 
 
இந்நிலையில், இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பல பாலிவுட் நடிகைகளின் பெயர் அடிபட்டது. தற்போது, ஹூமா குரோஷி நடிக்க இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. ரஜினி மற்றும் ஹீமாவிற்கான போட்டோ ஷூட் சமீபத்தில் நடந்தது. இதில், அவர் இப்படத்தின் ஹீரோயினாக தேர்ந்தெடுக்கப்பட்டார் எனக் கூறப்படுகிறது.


 

 
இப்படத்தில் ரஜினி தலையில் குல்லா மற்றும் வேஷ்டி அணிந்து நடிக்கிறார். மேலும், ஹூமா குரோஷி தலையில் முக்காடு அணிந்த பெண் போல் போட்டோ ஷூட் நடத்தப்பட்டதாக தெரிகிறது. எனவே, ரஜினி இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராக நடிக்கிறார் எனத் தெரிகிறது. முதலில் மறைந்த மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் கதையில் ரஜினி நடிக்கிறார் என செய்திகள் வெளியானது. தன்னுடைய தந்தை கதையில் ரஜினி நடித்தால் வழக்கு தொடர்வேன் என ஹாஜி மஸ்தானின் மகன் ரஜினிக்கு கடிதமும் அனுப்பினார். ஆனால், ஹாஜி மஸ்தான் கதையை நாங்கள் எடுக்கவில்லை என இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இப்படம் வேறு மாதிரியான கதையம்சம் கொண்டதாக இருக்கும் எனத்தெரிகிறது.
 
இப்படத்தின் வேலைகள் வேகமாக நடைபெற்று வருவதால், ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :