1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : செவ்வாய், 7 நவம்பர் 2017 (15:44 IST)

கார் மோதியதில் நடிகை உயிர் தப்பினார்

கார் மோதி விபத்து ஏற்பட்டதில், அதிர்ஷ்டவசமாக நடிகை ஷிவானி உயிர் தப்பினார்.




தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்தவர் டாக்டர் ராஜசேகர். ராஜசேகர் - ஜீவிதா தம்பதியரின் மகள் ஷிவானி, பிரபு சாலமன் இயக்கும் ‘கும்கி 2’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு ஹைதராபாத் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார் ஷிவானி. அப்போது சாலையில் இருந்த வேகத்தடையை ஷிவானி கவனிக்கவில்லை. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார், அருகிலிருந்த இன்னொரு காரின் மீது மோதியது.

இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக ஷிவானி உயிர் தப்பினார். இருந்தாலும், சேதமடைந்த காரின் உரிமையாளர் ஷிவானி மீது ஜுப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடைபெற்று வருகிறது.