கொஞ்சம் இடைவெளி வேண்டும்… ஆர் ஆர் ஆர் இசையமைப்பாளருக்காக உருகிய ராஜமௌலி!
தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் கீரவாணி. தமிழில் மரகதமணி என்ற பெயரில் இவர் அழகன், உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்தவர். இவர் இசையமைப்பில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் உலக அளவில் புகழ் பெற்றன.
இந்நிலையில் இப்போது ஆர் ஆர் ஆர் படத்துக்காக கோல்டன் க்ளோப் விருதைப் பெற்றுள்ளார். அடுத்து ஆஸ்கர் இறுதிப் பட்டியலிலும் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று அவருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. அதைப் பற்றி ட்வீட் செய்துள்ள ராஜமௌலி “இந்த விருது உங்களுக்கு தாமதமாகவே கிடைத்துள்ளது. ஆனால் நீங்கள் சொல்வது போலவே இந்த பிரபஞ்சம் எதிர்பாராத விசித்திரமான வழிகளில் ஒருவனுக்கு பரிசளிக்கிறது. இந்த உலகிடம் நான் பேச முடிந்தால் ஒன்றை முழுமையாக அனுபவித்த பின்னர் இன்னொன்றை கொடுங்கள் என சொல்வேன்” எனக் கூறியுள்ளார்.