வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (08:28 IST)

நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் க்ளோப் விருது!

ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் க்ளோப் விருது வழங்கப்பட்டுள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் பெரும் ஹிட் அடித்த இந்த படம் மொத்தமாக 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் வசூல் சாதனையையும் படைத்தது.

நேரடியாக போட்டி பிரிவில் ஆஸ்கருக்கு இந்த படத்தை பல் பிரிவுகளில் நாமினேட் செய்தார் ராஜமௌலி. இந்நிலையில் இப்போது இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல்கள் பிரிவிக்கான 15 பாடல்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்போது கோல்டன் க்ளோப் விருது விழாவில் ‘சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில்’ நாட்டு நாட்டு பாடல் விருது பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து இந்த விருதை பெறும் முதல் பாடலாக சாதனை படைத்துள்ளது நாட்டு கூத்து பாடல்.