வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (15:16 IST)

மம்முட்டி மகன், ஸ்ரீதேவியின் மகள், ராஜமௌலியின் தந்தை - ஓர் அரிய கூட்டணி

விஜயேந்திர பிரசாத் - ராஜமௌலியின் தந்தை - எழுதிய கதைதான் பாகுபலியும், பஜ்ரங்கி பைஜானும்.


 

 
இரண்டுமே 500 கோடி ரூபாய் படங்கள். விரைவில் விஜயேந்திர பிரசாத்தின் இன்னொரு கதையில் சல்மான் நடிக்க உள்ளார்.
 
இந்நிலையில், அபூர்வ கூட்டணியுடன் ஒரு படம் தயாராக உள்ளது.
 
விஜயேந்திர பிரசாத்தின் கதையில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆனால், இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வமாக இந்த செய்தியை உறுதி செய்யவில்லை. இந்த செய்தி மட்டும் உண்மையானால், அது நான்கு மொழிகளை உள்ளடக்கிய அரிய கூட்டணியாக இருக்கும்.