மீண்டும் தன் பழைய அழகை பெற்ற ரைசா… வெளியிட்ட புகைப்படம்!
நடிகை ரைசா கடந்த மாதம் செய்துகொண்ட ஒரு ஃபேஷியல் சிகிச்சையால் அவரது முகம் விகாரமானது.
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரைசா வில்சன் சமீபத்தில் பேஸியல் செய்து செய்த நிலையில் திடீரென தனது முகம் வீங்கி விட்டதாகவும் இதனை அடுத்து தவறான சிகிச்சையால் தான் இந்த நிலை தனக்குஏற்பட்டதாகவும், இதனை அடுத்து தனக்கு பேஸியல் செய்த மருத்துவர் பைரவி தனக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு பதில் அந்த மருத்துவரும் ரைசா மேல் மான நஷ்ட வழக்கு பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ரைஸா தனது பழைய முக அமைப்பை மீண்டும் பெற்றுள்ளார். அதை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.