ராகுல் காந்தி வருகைக்கு பின்னரே சப்ஸ்க்ரைபர் எண்ணிக்கை அதிகமானது! வில்லேஜ் குக்கிங் சேனல்
தமிழகத்தில் முதன்முறையாக 1 கோடி சப்ஸ்க்ரைபர்களை பெற்ற வில்லேஜ் குக்கிங் சேனல் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவரான பெரியதம்பி தாத்தாவும், சில இளைஞர்களும் சேர்ந்து கிராமத்து சமையல் செய்யும் யூட்யூப் சேனல் ஒன்றை கடந்த 2018ம் ஆண்டு தொடங்கினர். அவர்களுடைய நகைச்சுவையான பேச்சும், பாரம்பரிய கிராம சமையலும் பலரை ஈர்க்கவே கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் 1 கோடி சப்ஸ்க்ரைபரை பெற்ற முதல் யூட்யூப் சேனலாக டைமண்ட் கேடயத்தை பெற்றுள்ளது வில்லேஜ் குக்கிங் சேனல்.
இந்நிலையில் பத்தோடு பதினொன்றாக இருந்த சேனலுக்கு கடந்த தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகை தந்து அவர்களோடு சமைத்து சாப்பிட்ட வீடியோவுக்குப் பின்னரே அதிகளவில் சப்ஸ்க்ரைபர் எண்ணிக்கை அதிகமானதாக சேனலை சேர்ந்தவர்கள் சொல்லியுள்ளனர்.