1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 அக்டோபர் 2020 (15:55 IST)

பொன்னியின் செல்வன் பணியைத் தொடங்கிய இசைப்புயல்! பாட்டு யார் எழுதறாங்க ரஹ்மான் சார்?

பொன்னியின் செல்வன் படத்துக்காக மூன்றாவது பாடலை மெட்டமைக்கும் பணியில் ஏ ஆர் ரஹ்மான் ஈடுபட்டுள்ளார்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக இலங்கையில் நடத்தப்படவுள்ள படப்பிடிப்பிற்காக இலங்கை அரசிடம் அனுமதியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இலங்கை படப்பிடிப்புக்கு முன்னர் சென்னையில் போடப்பட்ட செட்டில் படமாக்கவும் ஐதராபாத்தில் ஒரு சில காட்சிகளை படமாக்கவும் மணிரத்னம் திட்டமிட்டுள்ளார் 

சென்னை, ஐதராபாத் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன்பின்னர் படக்குழுவினர் இலங்கை செல்ல விருப்பதாகவும் இலங்கையில் உள்ள அடர்ந்த காடுகளில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செல்லப்போவதில்லை என்றும் அந்த காட்சிகளும் ஐதராபாத்திலேயே படமாக்கப் போவதாகவும் வதந்திகள் பரவி வருவதாகவும் அதில் உண்மையில்லை என்றும் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

படப்பிடிப்பு வேலைகள் ஒருபுறம் இருக்க ரஹ்மான் இப்போது படத்துக்காக மூன்றாவது பாடலை கம்போஸ் பண்ணி வருகிறாராம். இந்த பாடலை ஒட்டுமொத்தமாக சேர்ந்து  9 பேர் பாட உள்ளார்களாம். மீடு பிரச்சனையில் சிக்கியதால் வைரமுத்து இந்த படத்துக்கு எழுதமாட்டார் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது பாடலை யார் எழுதுகிறார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.