1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2017 (16:11 IST)

அனிதா குடும்பத்திற்கு நிதியுதவி அளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்

அரியலூரைச் சேர்ந்த அனிதா நீட் தேர்வின் காரணமாக மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலர் தங்களின் அனுதாபத்தையும், அரசுக்கு கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

 
இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ், அனிதாவின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். இதற்கான காசோலையை ராகவா லாரன்சின் உதவியாளர்கள், அனிதாவின் வீட்டுக்குச் சென்று கொடுத்துள்ளனர்.
 
இதனை தொடர்ந்து இந்த செய்தியை வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்று ராகவே லாரன்ஸ் கேட்டுகொண்டாராம்.  இருந்தாலும் எப்படியோ இந்த செய்தி வெளிவந்துள்ளது. 
 
அனிதாவின் சகோதரர் மணிரத்னம் நீட் தேர்வில் அரசு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். அதன்பின்னர் இந்த நிதியுதவியை பெற்றுக் கொள்கிறோம் எனக் கூறி, அனிதாவின் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.