திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (23:23 IST)

அடப்பாவிகளா! உயிரோடு இருப்பவரை சாக வைத்த ராகவா லாரன்ஸ் படக்குழு

ஒரு காட்சி இயல்பாக வரவேண்டும் என்பதற்காக ஒரு இயக்குனர் மெனக்கிடுவது தவறு இல்லை. ஆனால் அதற்காக உயிரோடு இருக்கும் காவல்துறை அதிகாரியை இறந்தது போல் படமாக்கிய ராகவா லாரன்ஸ் படக்குழு கடும் சிக்கலில் மாட்டியுள்ளது.



 
 
ஆம், மக்கள் சூப்பர் ஸ்டார் என்று தனக்குத்தானே பட்டம் போட்டுக்கொண்டு ராகவா லாரன்ஸ் நடித்த மொக்கை படமான 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தில் ஒரு காட்சியில் கலவரத்தில் இறந்த காவல்துறை அதிகாரிகளின் புகைப்படங்களை காண்பிக்க முடிவு செய்தார். இதற்காக உண்மையிலேயே கலவரத்தில் இறந்த காவலர்களின் லிஸ்ட்டை எடுத்தது படக்குழு
 
இதில் ஒரு அதிகப்பிரசங்கி உயிரோடு இருக்கும் காவல்துறை அதிகாரியின் புகைப்படத்தையும் கொடுத்துவிட்டாராம். இயக்குனரும் உறுதி செய்யாமல் அந்த புகைப்படத்தையும் வைத்து காட்சியை படமாக்கிவிட்டார். படமும் வந்த வேகத்தில் டப்பாவுக்குள் சென்றுவிட்டது.
 
இந்த நிலையில் அந்த அதிகாரி சமீபத்தில் இந்த படத்தை பார்த்து தன்னுடைய புகைப்படம் இறந்தவர் லிஸ்ட்டில் இருந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாராம். உடனே இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோ என ஒட்டுமொத்த படக்குழுவினர்களுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவருக்கு ஒரு பெரிய தொகை நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.