திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 மார்ச் 2020 (17:35 IST)

ரஜினிக்கு ஆதரவாகக் களமிறங்கிய ராகவா லாரன்ஸ் – சமூக வலைதளத்தில் பரவும் கவிதை !

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை நேற்று வெளிப்படுத்திவிட்ட நிலையில் அவருக்கு ஆதரவாக நடிகர் ராகவா லாரன்ஸ் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனக்கு முதல்வர் பதவியின் மேல் ஆசை இல்லை என்றும் தான் கட்சிக்கு மட்டுமே தலைமை வகிப்பேன் என்றும் கூறியது பல விதமான விவாதங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் ரஜினியின் ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் ஒரு கவிதையை எழுதி வெளியிட்டுள்ளார்.

சுவை புதிது!
பொருள் புதிது!
வளம் புதிது!
சொற் புதிது!
சோதி மிக்க நவகவிதை,
எந்நாளும் அழியாத மா கவிதை!
"கவியரசன் தமிழுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது"
என் பாட்டுக்கு ராஜா,
இது காட்டுக்கு ராஜா!
இவை அன்று பாரதியார் சொன்னது!
இன்று நம் தலைவர் சொல்லும்
அரசியல் புதிது!
எண்ணங்கள் புதிது!
முதல்வர் பதவி வேண்டாம் என்கிற வழி புதிது! இதை புரிந்து கொண்டால் நன்மை நமக்கு!
தலைவரை திட்டுபவர்கள் கூட,
தலைவரின் திட்டங்களையும்,
அவரது மனதையும் புரிந்து கொண்டு பாராட்டுகிறார்கள்!
இதுவே முதல் வெற்றி!
அப்படி தலைவரின் மனதை புரிந்து கொண்டு பாராட்டிய,
அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி!
நம் சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினிகாந்த் அவர்களின் எண்ணங்கள் நிறைவேற,
நான் வணங்கும் ராகவேந்திரா சுவாமியை வேண்டிக் கொள்கிறேன்!