1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2017 (22:33 IST)

கெடுவான் கேடு நினைப்பான்: விஷாலை வெளுத்து வாங்கிய ராதிகா

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றபோது சேரன் தரப்பினர்களுக்கும், விஷால் தரப்பினர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுக்குழு சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது
 
இந்த நிலையில் நேற்று பொதுக்குழு நல்லபடியாக முடிந்துவிட்டதாக விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ஆனால் சேரன் தரப்பினர் பொதுக்குழு ரத்து செய்யப்பட்டதாக கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் இதுகுறித்து நடிகை ராதிகா தனது டுவிட்டரில் கூறியபோது, 'கெடுவான் கேடு நினைப்பான்' என்று கூறிவிட்டு பின்னர் சங்கத்தில் பிரச்சனை என்றால் அலுவலகத்தில் பேசி தீர்த்து கொள்ள வேண்டுமே தவிர பத்திரிகையாளர்களிடம் செல்ல கூடாது என்று தலைவர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. எங்கேயோ கேட்ட குரல்
 
தலைவருக்கு மரியாதையோ நெறிமுறையோ தெரியாமல் இருப்பது துரதிஷ்டவசமானது என்று டுவீட்டியுள்ளார். மேலும் ஒரு நபரின் உண்மையான நிறத்தை ரொம்ப நாள் மறைத்து வைக்க முடியாது என்றும் வெகுசீக்கிரம் அது வெளிவந்துவிடும் என்றும் ராதிகா மேலும் தெரிவித்துள்ளார்.