செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Updated : வெள்ளி, 26 மே 2017 (10:49 IST)

ராதிகா சரத்குமார் விரட்டிய டிவி சீரியல் நடிகைக்கு ஆதரவளித்த விஷால்

ராதிகா சரத்குமாரால் விரட்டப்பட்ட டிவி சீரியல் நடிகையான சபீதா ராய்க்கு ஆதரவளித்துள்ளார் நடிகர் விஷால்.

 
‘வாணி ராணி’ சீரியலில் நடித்துவந்தவர் சபீதா ராய். அவருக்கும், அந்த சீரியலின் மேனேஜரான சுகுமாறனுக்கும் இரவு நேரத்தில் சண்டை ஏற்பட்டது. இதனால், அவர்கள் இருவரும் அடித்துக் கொண்டனர். இந்தக் காட்சி, செய்தித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதோடு, சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீயாய் பரவியது. இதையடுத்து, சபீதா ராயை  சீரியலில் இருந்து தூக்கினார் ராதிகா சரத்குமார்.
 
இந்நிலையில், சரத்குமாரின் எதிரியான விஷாலிடம் தஞ்சம் அடைந்துள்ளார் சபீதா ராய். விஷால் - சமந்தா நடிப்பில், மித்ரன்  இயக்கும் ‘இரும்புத்திரை’ படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்துள்ளார் விஷால், இதனால், டிவிக்கு பிரேக் விட்டு, சினிமாவில்  கவனம் செலுத்தப் போகிறாராம் சபீதா ராய்.