1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2017 (15:58 IST)

என்னடா இது ராதிகாவிற்கு வந்த சோதனை - விளம்பர படத்தால் சர்ச்சை

சமீப காலமாக நடிகை ராதிகா சரத்குமார் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிறார். 


 

 
அவரின் கணவரும் நடிகருமான சரத்குமார், நடிகர் சங்க தேர்தலில் தோற்றுப் போனார். சரி, அரசியலிலாவது வெற்றி பெறுவோம் எனக் கூறி கடந்த சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டார். அதிலும் தோல்வி. 
 
மேலும், சமீபத்தில் அவரது வீடு மற்றும் அவரின் மனைவி ராதிகாவின் ரேடன் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனை ஆகியவை ராதிகாவை கலங்கடிக்க செய்தது.
 
இந்நிலையில், அவர் எப்போதே கோகோ-கோலா குளிர்பானத்தில் நடித்த விளம்பர படத்தை சிலர் எடுத்து டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்யமாட்டோம் என தமிழக வியாபாரிகள் முடிவெடுத்திருக்கும் வேளையில், ராதிகாவின் விளம்பர படத்தை பார்த்த சிலர், அது தற்போது எடுக்கப்பட்ட விளம்பரம் என நினைத்து பலவரும் அவரை திட்டி வருகிறார்களாம்...