ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 மே 2020 (08:16 IST)

ராதிகா ஆப்தேவிடம் ஆபாசமாகப் பேசிய அந்த ஹிரோ யார்? ரசிகர்கள் கேள்வி!

இந்தியா முழுவதும் பிரபல நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே தன்னிடம் ஆபாசமாகப் பேசிய ஹீரோ ஒருவரைப் பற்றி கூறியுள்ளார்.

தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. இவர் நடித்த பல படங்கள் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. தற்போது இணையத்தொடர்களில் அதிகமாக நடித்துவரும் அவர், தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாக மூத்த நடிகர் ஒருவர் பற்றிக் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் ‘படப்பிடிப்பு முடிந்து நான் லிப்டில் சென்று கொண்டிருந்தேன். அப்போது எனக்கு பயங்கரமாக முதுகு வலி இருந்தது. அப்போது என்னோடு லிப்டில் வந்த டாப் ஹீரோ ‘நான் வேண்டுமானால் அந்த இடத்தில் கை வைத்து தேய்த்துவிடவா?’ எனக் கேட்டார். மேலும் இரவில் ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள்’ எனக் கேட்டார்.’ எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் யார் அந்த மூத்த ஹீரோ என்பதை மட்டும் அவர் சொல்லவில்லை. இதுபற்றி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.