1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 மே 2020 (15:47 IST)

’அந்த’ விஷயத்தில் மட்டும் அரசு தலையிடாது எனக் கூறிய அமைச்சர் – தயாரிப்பாளர்கள் அதிருப்தி!

கொரோனாவுக்கு பின் சினிமா படப்பிடிப்புகள் தொடங்குவது தொடர்பாக திரைப்பட அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதமாக சினிமா படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை. இதன் காரணமாக தமிழ் சினிமாவில் மட்டும் 600 கோடி ரூபாய் அளவுக்கு முடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விரைவில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என பெப்சி அமைப்பின் தலைவர் ஆர் கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக திரையுலகைச் சேர்ந்த பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த சந்திப்பில் நடிகர்களின் சம்பளத்தையும் குறைத்துக்கொள்ள சொல்லி வலியுறுத்தும் படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் தலையிட முடியாது என அமைச்சர் கூறியுள்ளார். தயாரிப்பாளர்கள், திரையரங்கம் மற்றும் நடிகர் சங்க பிரதிநிதிகள் ஏற்பாடு செய்தால் பேச்சுவார்த்தைக்கு அரசு உதவும் எனக் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே திரையரங்கு திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.