புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வியாழன், 22 மார்ச் 2018 (18:05 IST)

ரஜினியைப் புகழ்ந்த ராதிகா ஆப்தே

‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே, அவரைப் புகழ்ந்துள்ளார்.


 
பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் ‘கபாலி’. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்திருந்தார். அதற்கு முன் சில தமிழ்ப் படங்களிலும் ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.



தன்னிடம் சில்மிஷம் செய்த தெலுங்கு நடிகரை அறைந்ததாக சமீபத்தில் தெரிவித்த ராதிகா ஆப்தே, ரஜினியைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். “ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது. மிக அருமையான மனிதர் மட்டுமல்ல, அற்புதமான மனிதரும் கூட. இப்படி ஒருவரை என் வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை” என்று தெரிவித்துள்ளார் ராதிகா ஆப்தே.