புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 16 மார்ச் 2018 (13:06 IST)

தானாக சென்று சர்ச்சை மன்னனிடம் சிக்கிய ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே, தெலுங்கில் தன்னை அறிமுகம் செய்த இயக்குநர் ராம் கோபால் வர்மாவை ஓய்வெடுக்குமாறு கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
நடிகை ராதிகா ஆப்தே கபாலி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இவர் தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகைகள் பாலியல் துன்புறுத்தல் தைரியமாக வெளியே பேசி வருகிறார். அண்மையில் இவரிடம் தமிழ் நடிகர் ஒருவர் அரை வாங்கிய செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், இவர் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோலிவுட்டில் ஓய்வுபெற வேண்டிய டைரக்டர் யார்? என்ற கேள்விக்கு ராம் கோபால் வர்மா என்று கூறியுள்ளார்.
 
தெலுங்கு சினிமாவில் ராதிகா ஆப்தேவை அறிமுகம் செய்த இயக்குநர் ராம் கோபால் வர்மா. ஏற்கனவே ராம் கோபால் வர்மா சர்ச்சைக்கு பெயர் போனவர். ராதிகா ஆப்தே கருத்து அவர் எப்படி ரியாக்ட் செய்ய போகிறார் என்ற கேள்வியுடன் உள்ளது திரையுலகம்.