வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 4 டிசம்பர் 2019 (18:09 IST)

அந்த மாதிரி படத்தில் நடிக்க நிறைய வாய்ப்பு கிடைத்தது - மனம் திறந்த ராதிகா ஆப்தே!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் கார்த்தியின் ‘அழகுராஜா’ படத்தில் அறிமுகமானார். ரஜினிக்கு ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 
 
இந்நிலையில் பார்கா தத் தொகுத்து வழங்கிய ’வீ தி வுமன் பேனலில்’ எந்த மாதிரியான படங்களை நீங்கள் நிராகரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சிரித்துக்கொண்டே...நகைச்சுவை படம் மற்றும் ஆபாச நகைச்சுவை படங்களை நிராகரிப்பின் என கூறினார். காரணம் ’பட்லாபூர்’  நான் கவர்ச்சியான காட்சிகளில் நடித்தேன். அதனால் பாலியல் நகைச்சுவை படங்களில் என்னை நடிக்க வைக்க பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முயற்சித்தார்கள். 
 
மேலும்,  "முற்போக்கான" எழுத்து என்ற பெயரில் எதையும் எளிதாக எழுதிவிடுகிறார்கள். அதனால் நான் அந்த மாதிரியான படங்களை  நிராகரித்து விடுவேன் என வெளிப்படையாக கூறினார்.