நிர்வாண உடலை பார்க்க வேண்டுமா? விளக்கமளித்த ராதிகா ஆப்தே


Abimukatheesh| Last Updated: புதன், 5 அக்டோபர் 2016 (12:47 IST)
நிர்வாண உடலை பார்க்க வேண்டுமா? முதலில் உங்கள் உடலை பாருங்கள் என்று நடிகை ராதிகா ஆப்தே நிருபரிடம் கூறினார்.

 

 
ராதிகா ஆப்தே ‘பர்சேட்’ என்ற படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளார். அந்த காட்சி இணையதளத்தில் வைரலாக பரவியது. அது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 
 
சிறிது நாட்களாக அந்த சர்ச்சை அடங்கிய நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர் ராதிகாவிடம் மீண்டும் அந்த சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினார். 
 
அதற்கு பதில் அளித்த ராதிகா ஆப்தே கூறியதாவது:-
 
நண்பரே, உங்களை போன்றவர்களால் தான் இது சர்ச்சை ஆக்கப்படுகிறது. முதலில் நீங்கள் அந்த வீடியோவை பார்கிறீர்கள், பின்னர் அதை ஷேர் செய்கிறீர்கள். உங்களைபோன்ற நபர்களால்தான் இதுபோன்ற சர்ச்சை ஏற்படுகிறது.
 
நான் ஒரு நடிகை, நடிப்பில் எனக்குரிய வேலையை செய்து வருகிறேன். நாட்டை விட்டு வெளியே சென்று பாருங்கள், உலக சினிமா பாருங்கள், இதுபோன்ற கேள்விகளை கேட்க மாட்டீர்கள். நீங்கள் ஒர் உடலை நாளை நிர்வாணமாக பார்க்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் உடலை கண்ணாடியில் பார்த்து கொள்ளுங்கள் அல்லது மாறாக எனது வீடியோவை பாருங்கள்.
 
பின்னர் நாம் இதுபற்றி பேசலாம் என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :