1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : செவ்வாய், 19 ஜூன் 2018 (13:45 IST)

12 லட்ச ரூபாயை கடித்து குதறிய எலி: எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி

அசாம் மாநிலத்தில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஒரு ஏடிஎம்-இல் ரூ.12 லட்சம் மதிப்பிலான கரன்ஸி நோட்டுக்களை எலி கடித்து குதறிய சம்பவம் அந்த வங்கியின் நிர்வாகிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
அசாம் மாநிலத்தில் உள்ள தின்சுகியா என்ற மாவட்டத்தில் லாய்புலி என்ற பகுதியில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம்-இல் பணம் நிரப்பும் பணியில் பிசினஸ் சொலுயூசன்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 19ஆம் தேதி இந்த ஏடிஎம்ல் ரூ.29 லட்சத்தை அந்த தனியார் நிறுவனம் வைத்தது. 
 
ஆனால் திடீரென மறுநாளே அதாவது மே 20ஆம் தேதியே இந்த ஏடிஎம் வேலை செய்யவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் எஸ்பிஐ வங்கியினர் கண்டுகொள்ளவில்லை. கடைசியில் ஜுன் 11ஆம் தேதி ஏடிஎம்-ஐ சரிசெய்ய வந்தபோது ஏடிஎம் திறந்து பார்த்தபோது அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஏடிஎம்-இல் வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுக்களை எலி கடித்து குதறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் டேமேஜ் ஆன நோட்டுக்களின் மதிப்பு ரூ.12 லட்சம் என்றும் மீதி 17 லட்சம் பணம் பாதுகாப்பாக இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பொதுமக்கள் புகார் அளித்ததும் எஸ்பிஐ வங்கி நிர்வாகிகள் சரிசெய்ய வந்திருந்ததால் இவ்வளவு பெரிய நஷ்டம் இருந்திருக்காது என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.