செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (19:28 IST)

தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளில் ராதே ஷ்யாமின் வசூல் நிலவரம் என்ன தெரியுமா?

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் ரிலிஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

பாகுபலி, சாஹோ உள்ளிட்ட பிரம்மாண்டமான படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் மற்றொரு பிரம்மாண்டமான படம் ராதே ஷ்யாம். 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படம் இந்தியா முழுவதும் மார்ச் 11 ஆம் தேதி ரிலிஸானது.

ரிலீஸ் ஆனது முதல் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில் தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளில் வசூலில் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளில் படம் வசூலில் சோபிக்கவில்லை என சொல்லப்படுகிறது.