தொடங்கியது ராதாமோகனின் பிருந்தாவனம்


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (16:53 IST)
ராதாமோகன் ஒருவர்தான் இப்போது தமிழில் பீல்குட் திரைப்படங்களை எடுக்கிறார். அவரது கடைசி படங்கள் கௌரவம், உப்பு கருவாடு இரண்டும் குட் என்று பெயர் வாங்கினாலும் பீல் குறைவாகவே இருந்தது. புதிதாக அவர் தொடங்கியிருக்கும் படம், பிருந்தாவனம்.

 

 
 
அருள்நிதி, தான்யா நடிக்கும் இந்தப் படம் கர்நாடகத்திலுள்ள சக்லேஷ்பூரில் தொடங்கியது. விவேக் மரக்கன்று நட்டு இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
 
வித்தியாசமான காதல் கதையான இதன் கதை, திரைக்கதையை ராதாமோகன் எழுத, பொன்.பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசை, தயாரிப்பு ஷான் சுந்தர். 
 
இந்தப் படமாவது ராதாமோகனை பழைய பார்முக்கு கொண்டு வருமா பார்ப்போம்.


இதில் மேலும் படிக்கவும் :