திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 26 மே 2020 (16:37 IST)

ஆத்தி... ராஷி கண்ணாவுக்கு இம்புட்டு திறமை இருக்கா! இது தெரியாம போச்சே இவ்ளோவ் நாளா!

இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். மேலும் இறுதியாக விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் விஜய் சேதுபதியுடன் "சங்கத் தமிழன்", படத்தில் நடித்திருந்தார். அதையடுத்து  ‘கடைசி விவசாயி’  படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் காபே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷி கண்ணா, அதன் பின்னர் தெலுங்கு, இந்தி,மலையாளம் என்று அதனை மொழி படங்களிலும் நடித்து ஆல் ரவுண்டு வருகிறார்.  டெல்லியை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவிற்கு இவர் புதிது என்றாலும் நடித்ததெல்லாம் ஹிட் என்ற அளவிற்கு ராசியான நடிகையாகிவிட்டார் ராஷி கண்ணா.

இந்நிலையில் லாக்டவுனில் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது ராஷி கண்ணா, கிட்டார் இசைத்துக்கொண்டே பாட்டு பாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு " இதயத்தின் மொழி. கிட்டார் இசைக்க கற்று வருகிறேன். எனக்கு பிடித்த பாடலை வாசிக்கிறேன். எனது இந்த முயற்சி உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்" என பதிவிட அனைவரும் அவரது திறமையை கண்டு வியந்து வாழ்த்துக்கூறி வருகின்றனர்.