செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2017 (12:57 IST)

கவர்ச்சியான போட்டோவை வெளியிட்ட ராய் லட்சுமி

தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடும் நடிகைகள் பட்டியலில், ராய் லட்சுமியும்  இணைந்துள்ளார்.

 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்தவர் ராய் லட்சுமி. லட்சுமி ராய் என்ற பெயரை, ராய் லட்சுமி என்று மாற்றிக் கொண்டதன் பலனாக, பாலிவுட்டில் அறிமுகமாகப் போகிறார். தீபக் ஷிவ்தாசனி இயக்கியுள்ள ‘ஜீலி-2’  படத்தில் ராய் லட்சுமி தான் ஹீரோயின். ஹீரோவே இல்லாத இந்தப்  படத்தில், ராய் லட்சுமி தான் மொத்தப் படத்தையும் தாங்கிப்  பிடிக்கிறார் என்கிறார்கள். 
 
இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், ஓய்வெடுப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் ராய் லட்சுமி. ப்ளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள மியாமி பீச்சில் ஹாயாக அமர்ந்து பொழுதைக் கழிக்கிறார். அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளவர், ‘என்  மனதைத்தான் நான் ஃபாலோ செய்கிறேன். அது என்னை பீச்சுக்கு போகச் சொன்னது’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தப்  புகைப்படத்தைப் பார்த்து இன்னும் சூடாகிக் கிடக்கிறார்கள்  இங்குள்ளவர்கள்.