செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (09:48 IST)

R K சுரேஷ் & கயல் ஆனந்தி நடிக்கும் ‘ஒயிட்ரோஸ்’… பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்!

பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் விசித்திரன் திரைப்படம் ரிலீஸாகி கவனத்தைப் பெற்றது.

அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'. இதில் ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் தயாரிப்பாளர் ரூஸோ, மற்றொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகை 'கயல்' ஆனந்தி முக்கியமான வேடத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் முன்னாள் தமிழக காவல்துறை உயரதிகாரி எஸ். ஆர். ஜாங்கிட் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார்.

நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கியது. சமீபத்தில் ஆர் கே சுரேஷ் நடிப்பில் விசித்திரன் திரைப்படம் ரிலீஸாகி கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.