வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 30 ஜூன் 2021 (18:00 IST)

விஜய் சேதுபதி பட பிரபலம் மீது மோசடி புகார்!

நடிகர் விஜய்சேதுபதி படத் தயாரிப்பாளர் மீது சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான படம் தர்மதுறை. இப்படத்தை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். இவர் மருது படத்தில் வில்லனாகவும் , பில்லா பாண்டி ஹீரோவாகவும் படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், கமலக் கண்ணன் என்பவர் ஆர்.கே.சுரேஷிடம்,  ராமமூர்த்திக்கு 10 கோடி ரூபாய்  கடன் வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.  இதையடுத்து இக்கடன் தொகை பெற கமலக்கண்ணன் அவரிடம் 1 கோடி ரூபாய் பெற்றதாகத் தெரிகிறது.  ஆனால் அவர் கேட்ட கடன் தொகையை கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

மேலும் கமலக்கண்ணன் தங்களைப்போல் பலரை இதேபோல் மோசடி செய்து போலீஸாரால் கைது செய்யப்பட்டது தெரியவந்தது.  இந்நிலையில் ராமமூர்த்தியின் மனைவி வீணா  நடிகர் ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை தயங்கி வருகிறார்கள் எனக் கூறி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும், முதலமைசர் தனிப்பிரிவிலும் புகார் கூறியுள்ளார்.

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் மீது பண மோசடி புகார் கூறியுள்ளது சினிமாத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.