செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 11 ஜூன் 2018 (19:21 IST)

ஆர்.கே நகர் படத்தின் டிரெய்லர் வெளியானது!

வெங்கட் பிரபு தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள ஆர்.கே நகர் படத்தின் டிரெய்லர் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
 
வடகறி படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் ஆர்.கே நகர். இப்படத்தில் வைபவ் நாயகனாக நடித்து உள்ளார். சனா அல்தாஃப் ஹிரோயினாக நடித்துள்ளார். மேலும், சம்பத் ராஜ், இனிகோ பிரபாகர், கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.
 
இப்படத்தின் டீஸர் கடந்த வருடம் ரிலீஸாகி ரசிகர்களிடையே மிகந்த வரவேற்பை பெற்றது. ஏன்னென்றால் இந்த டீஸரில், அரசியலுக்கு வரும் நடிகர்களை மறைமுகமாக கலாய்ப்பது போன்ற வசனம் இடம்பெற்றிருந்தது.
 
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த டிரெய்லரில், இப்படம் அரசியல் சார்ந்த படம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.