செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2023 (13:07 IST)

ரூ.699க்கு 10 படம் பார்க்கலாம்.. பிவிஆர் மல்டிபிளக்ஸ் சூப்பர் ஆஃபர்..!

‘பிவிஆர் ஐநாக்ஸ் பாஸ்போர்ட்’  என்ற ரூ.699 மாதாந்திர சந்தா பாஸ் பெற்றால் ஒவ்வொரு மாதமும் 10 படம் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
 
 
மல்டிபிளக்ஸ் நிறுவனமான பிவிஆர் திரையரங்குகளுக்கு மீண்டும் மீண்டும் பார்வையாளர்களை வரவழைக்க ரூ.699க்கு சந்தா சலுகை அறிமுகப்படுத்தியுள்ளது.  இன்று முதல் அறிமுகமாகும் இந்த திட்டத்தின் மூலம் பார்வையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 10 திரைப்படங்களை ரூ.699க்கு பார்க்கலாம்.  ஆனால் அதே நேரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை மட்டும் பார்க்க முடியும்.
 
இந்த சலுகையை பெற விரும்புபவர்கள் பிவிஆர் நிறுவனத்தின் இணையதளம் அல்லது செயலி மூலம் விண்ணப்பம் செய்யலாம். சந்தாவை குறைந்தது மூன்று மாதங்களுக்கு பெற வேண்டும்.  பொதுமக்களின் திரைப்படம் பார்க்கும் பழக்கத்தை அதிகரிக்க இந்த திட்டம் என பிவிஆர்  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கவுதம் தத்தா தெரிவித்தார்.  
 
Edited by Siva