1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 28 மார்ச் 2017 (17:40 IST)

மேக்கப் போட பெண்ணை பாடாய் படுத்திய நடிகர் பரத்!

இயக்குனர் வடிவுடையான் இயக்கத்தில் ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.


 
 
முழுக்க திகில் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் பரத், மருத்துவக்கல்லூரி மாணவர், மந்திரவாதி, பெண் வேடம் என மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். தமிழில் பொட்டு என்ற பெயரிலும், தெலுங்கில் பொட்டூ என்ற பெயரிலும், இந்தியில்  பிந்தி என்ற பெயரிலும் படம் வெளியாக உள்ளது. இதில் நமீதா, இனியா, சிருஷ்டி, ஊர்வசி, தம்பி ராமைய்யா, பரணி, ராஜேந்திரன், நிகேஷ்ராம், மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.


 
 
பரத் பெண் வேடத்தில் நடிக்கும்போது மேக்கப் மேன் சரி என்று சொன்னாலும் அவரை விடுவதில்லையாம். தனக்கு திருப்தி  தரும் வரை அவரை ஒரு வழி பண்ணிவிட்டாராம். மேலும் பெண் வேடத்தில் இயல்பாக நடித்து அனைவரையும் வியப்பில்  ஆழ்த்தினாராம்.