திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (15:36 IST)

6 மணி நேரத்தில் ரூ.25 லட்சம் சம்பளம்! – அப்படி என்ன செய்தார் புகழ்?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த நடிகர் புகழ் 6 மணி நேரத்தில் ரூ.25 லட்சம் சம்பாதித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் 2 சீசன்களாக காமெடியனாக பங்கேற்றவர் புகழ். இவருக்கு இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் அதிகமாகவே அதை தொடர்ந்து பல தமிழ் படங்களில் காமெடியனாக நடிக்கவும் இவருக்கு வாய்ப்புகள் வந்துள்ளது.

இந்நிலையில் காலம் சென்ற விவேக் தொகுப்பாளராக பங்கேற்ற புதிய காமெடி ஷோவான லொல் முடிஞ்சா சிரி பாப்போம் நிகழ்ச்சி அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. இதில் ப்ரேம்ஜி, சதீஷ் உள்ளிட்ட பல நகைச்சுவையாளர்களுடன் புகழும் பங்கேற்றார். இதில் அனைத்து காமெடியன்களும் சிரித்துவிட்ட நிலையில் கடைசி வரை சிரிக்காமல் இருந்து பரிசு தொகையான ரூ.25 லட்சத்தை வென்றுள்ளார் புகழ். வெறும் 6 மணி நேரமே கொண்ட இந்த தொடர் மூலம் ரூ.25 லட்சத்தை புகழ் வென்றுள்ளது வைரலாகியுள்ளது.