இளைஞனுக்கு செயற்கை கால் ….உதவிக்கரம் நீட்டிய பிரபல நடிகர்
பலருக்கும் முன்மாதிரியாக இவர் தன் நண்பர்களுடன் இணைந்து பல இளைஞர்கள்,விவசாயிகள்,மாணவர்கள், வேலையில்லாதோர், ஏழைகள் எனப் பலருக்கும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.
அந்த வகையில் இன்று, தினேஷ் மணிகண்ட என்ற 20 வயது இளைஞருக்கு விபத்தொன்றில் ஒரு கால் இழந்துவிட்டதால் அவருக்கு செயற்கைக் கால் பொருத்த சுமார் 7 லட்சம் செலவாகுமென கூறியுள்ளனர். வறுமைநிலையிலுள்ள அவரால் அவ்வளவு பணத்தை திரட்ட முடியவில்லை எனவே சோனு சூட்டிடன் அவர் இந்த கோரிக்கை வைத்தார்.
இதற்குப் பதிலளித்த சோனு சூட், இந்த வாரத்தில் உனக்குப் புதிய கால் கிடைக்கும் என இளைஞனுக்குத் தெரிவித்துள்ளார்.