வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2023 (11:55 IST)

லியோ படத்துக்கு முட்டுக்கட்டை; விஜய் மீது அரசியல் அழுத்தம்!? – பொங்கியெழுந்த ரசிகர்கள்!

LEO
லியோ பட ஆடியோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பட ரிலீஸின்போது சிக்கல் எழலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் 30ம் தேதி சென்னையில் நடக்க இருந்த லியோ ஆடியோ வெளியீட்டு விழா பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இதன் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

முன்னதாக விஜய்யின் பல படங்கள் வெளியான போதும் இதுபோன்று பல சிக்கல்கள், தடங்கல்கள், அரசியல் அழுத்தங்களை நடிகர் விஜய் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. விஜய் அரசியல் வருகைக்கு திட்டமிட்டு வருவதாலேயே அவரது படங்களுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதாக அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். எந்த பிரச்சினையும் இன்றி படம் வெளியாக நடிகர் விஜய்யுடன் நிற்போம் என அவரது ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் விஜய்க்கு ஆதரவான ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Edit by Prasanth.K