செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2022 (16:31 IST)

மஹிந்திரா பிக்சர்ஸ் production no.1 திரைப்படம் பிரமாண்டமாக தொடங்கியது!

Gunas entertainment's சாய் கார்த்திக் வழங்கும் மஹிந்திரா பிக்சர்ஸ் (Mahindhra Pictures) முதல் காட்சிக்கு கிளாப் (Clap) அடித்த ஹீரோ பூரி ஆகாஷ்.


Gunas entertainment's சாய் கார்த்திக் வழங்கும் மஹிந்திரா பிக்சர்ஸ் (Mahindhra Pictures) பேனரில்  தமிழ் மற்றும் தெலுங்கு  மொழிகளில் வி.ஸ்ரீனிவாச ராவ் தயாரித்துள்ள "புரொடக்‌ஷன் நம்பர்.1" திரைப்படம் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்தது.

சைதன்யா கதாநாயகனாக , ரித்திகா கதாநாயகியாக நடிக்கிறார்கள்.  இந்த படத்தின் தொடக்க விழா, பூஜை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன், நடிகர் ஆகாஷ் பூரி வருகை தந்தார். முதல் காட்சிக்கு கிளாப் (Clap) அடித்து தொடங்கி வைத்தார் ஹீரோ பூரி ஆகாஷ். 

பின்னர் படக்குழு ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்.. திரைப்பட இயக்குனர் சின்ன வெங்கடேஷ் பேசுகையில் "அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள். நான் சொன்ன கதை பிடித்ததால் இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தார் தயாரிப்பாளர் வி.சீனிவாச ராவ். அவர்களுக்கு என் நன்றிகள்.

ஹீரோ ஆகாஷ் பூரி, தயாரிப்பாளர் வி. ராவ் வந்து எங்களை வாழ்த்தியது   எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இருந்தாலும் காதல், குடும்பம் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான அம்சங்கள் உண்டு. இதில் பல முன்னணி தமிழ் நடிகர்கள் நடிக்கிறார்கள்.  இரண்டாவது ஷெட்யூல் ஹைதராபாத்தில் நடைபெறும் " என்று கூறினார்.

படத்தின் தயாரிப்பாளர் வி.சீனிவாச ராவ்  "இது என்னுடைய முதல் படம்.இயக்குனர் சின்ன வெங்கடேஷ் சொன்ன கதை எனக்கு பிடித்ததால் மஹிந்திரா பிக்சர்ஸ் பேனரில் இப்படத்தை தயாரிக்கிறேன். அனைத்து ரசிகர்களும் விரும்பும் அனைத்து அம்சங்களுடன் வரும் இப்படம் எங்கள் பேனருக்கு நல்ல பெயரை பெற்று தரும் என நம்புகிறேன்" என்றார்.

படத்தின் நாயகன் சைதன்யா கூறுகையில், "இது எனது மூன்றாவது படம். வெங்கடேஷ் என்னை எனது முதல் படத்தின் மூலம் தெரியும். இப்படி ஒரு நல்ல படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் களுக்கு நன்றி. நல்ல டீம் மற்றும் நல்ல கதையுடன் உருவாகி வரும் இப்படம் கண்டிப்பாக அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும்" என்றார்.

பட நாயகி ரித்திகா சக்ரவர்த்தி கூறுகையில்..  "போம்ம அதிரிந்தி திம்ம திரிகிந்தி" படம் எனக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதையடுத்து, விஜய் தேவரகொண்டாவின் “குஷி” படத்தில், 'ஆனந்தா' படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறேன். இப்போது சஸ்பென்ஸ் த்ரில்லர் போன்ற நல்ல கதையில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி" என்றார்.

இசையமைப்பாளர் ஸ்வரூப்-ஹர்ஷா கூறியதாவது.. "இந்த படத்திற்கு அருமையான மெலடி பாடல்களை நல்ல பாடல் வரிகளுடன் வழங்குகிறோம்..இவ்வளவு நல்ல படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி." என்றார்.
 
Edited By: Sugapriya Prakash