எங்களுக்கும் ராயல்டி தரவேண்டும் –தயாரிப்பாளர்கள் கோரிக்கை!
இசைஞானி இளையராஜா தான் இதுவரை இசையமைத்த ஒட்டுமொத்த பாடல்களின் காப்புரிமையையும் தென்னிந்திய இசையமைப்பாளர்கள் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா பல வருடங்களாக தனது பாடல்களின் காப்புரிமையைப் பெறுவதற்காகப் போராடி வருகிறார். தனது பாடல்களின் காப்புரிமையை வாங்கிய நிறுவனங்கள் தனக்குக் காப்புரிமை தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது பாடல்கள் அனைத்தின் காப்புரிமையை இசையமைப்பாளர்கள் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளர். அதன்படி அந்த பாடல்களை வெளிநாடுகளில் கச்சேரிகள் மற்றும் பிற வியாபார நோக்கிற்காக பயன்படுத்துவர்களிடம் இருந்து அதற்கான ராயல்டீயை வசூலித்து தனக்கும் அந்த பாடல்களில் பணியாற்றிய இசைக் கலைஞர்களும் அளிக்க வேண்டுமென அறிவித்துள்ளார். இதன் மூலம் நலிந்த பல இசைக் கலைஞர்களுக்கு அந்த தொகை போய் சேரும் என அறிவித்துள்ளார்.
இந்த முயற்சிக்கு திரையுலகின் அனைத்துத் தரப்பில் இருந்து பலத்த வரவேற்புகள் வந்த வண்ணம் உள்ளன. அதில் ஒரு இப்போது முக்கியத் திருப்பமாக தயாரிப்பாளர்கள் சிலர் அந்த தொகையில் தங்களுக்கும் ராயல்டீ தரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அதில் ஒரு தயாரிப்பாளர் ‘இந்த முயற்சியை நாங்கள் மனமார வரவேற்கிறோம். ஆனால் பாடல் உருவாக்கத்திற்காக செய்யப்பட்ட மொத்த செலவும் அந்தந்த படத்தின் தயாரிப்பாளர்களின் பணம். அதில் பல தயாரிப்பாளர்கள் இப்போது நலிவடைந்த நிலையில் உள்ளனர். எனவே வரும் ராயல்டீ தொகையில் ஒரு பகுதியினை தயாரிப்பாளர்களுக்கும் தரவேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.