1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (21:11 IST)

ரஜினியை அறிமுகம் செய்த தயாரிப்பாளரின் புதிய முடிவு !

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி. இவரை இந்தியில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் புதிய முடிவெடுத்துள்ளார்.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்  மற்றும் இயக்குநர் கே.சி. பொகாடியா. இவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினியை இந்தி சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார்.

மேலும், அவருடன் சூப்பர் ஸ்டார் ரஜினி 5 படங்கள் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் நுழைய உள்ளார்.

தமிழ் சினிமாவில் இவர் முதல் படம் தயாரிக்கவுள்ளதால்  இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இன்றைய பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான சல்மான் கான், அக்‌ஷய்குமார்,ராஜேஷ் கண்ணா, அபிதாப் பச்சன் போன்ற நடிகர்களுடன் இவர் பணியாற்றியுள்ளார்.