”தமிழ் சினிமா நல்லாவே இருக்குப்பா … தயவு செய்து விட்ருங்கப்பா” – KGF 2 புகழுரைகளுக்கு தயாரிப்பாளர் சி வி குமார் பதில்!
கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியாகி இந்தியா முழுமவதும் அமோகமான வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.
கிடைக்கும் வரவேற்புகளை வைத்து தமிழ் சினிமா மோசமாகிவிட்டது போன்ற கருத்துகளும் எழுந்துள்ளன. இதற்கு தமிழ் சினிமாக்காரர்கள் அவ்வப்போது எதிர்வினை ஆற்றி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சி வி குமார் தன்னுடைய முகநூல் பதிவில் “ஓரு முள்ளும் மலரும் , கல்யாண பரிசு , காதலிக்கநேரமில்லை , recently ஆடுகளம் , சூதுகவ்வும் , முண்டாசுபட்டி , சதுரங்கவேட்டை , ஜிகர்தண்டா , இன்று நேற்று நாளை , மெட்ராஸ் , ககபோ , விக்ரம் வேதா , தீரன் அதிகாரம் ஒன்று , இறுதிசுற்று , வடசென்னை , ராட்சாசன் , அசுரன் , பரியேறும் பெருமாள் , கைதி , சார்பேட்டா பரம்பரை , ஜெய்பீம் , டாணாக்காரன் இதெல்லாத்தையும் விட இந்த mass masala கோலார் தங்க வயல் தான் best of best ணா தமிழ் சினிமா நல்லாவே இருக்குப்பா. தயவு செய்து விட்ருங்கப்பா.
குறிப்பு: கேஜிஎஃப் ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம். ஆனால் மாஸ்டர்ஸ் உருவாக்கிய படங்களுக்கு நிகரானது இல்லை என்பது என் எண்ணம்.” எனக் கூறியுள்ளார்.