1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (19:55 IST)

உதயநிதி ஸ்டாலின் உடன் தயாரிப்பாளர் போனி கபூர் நேரில் சந்திப்பு!

உதயநிதி ஸ்டாலின் உடன் தயாரிப்பாளர் போனி கபூர் நேரில் சந்திப்பு!
பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் தயாரிப்பாளருமான போனிகபூர் மரியாதை நிமித்தமாக உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து உள்ளார். 
 
நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடித்துவருகிறார். நெஞ்சுக்கு நீதி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னை வந்த தயாரிப்பாளர் போனி கபூர் உதயநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பின்போது ராகுல் என்ற ஒரு உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
உதயநிதி ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக போனிகபூர் சந்தித்த சந்திப்பின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது