புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 19 நவம்பர் 2017 (20:57 IST)

இதற்கு காரணம் வடிவேலுதான்; இயக்குநர் சங்கர் புகார்

வடிவேலு படப்பிடிப்பிற்கு வராததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இயக்குநர் சங்கர் தாயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.


 

 
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான 24ஆம் புலிகேசி படத்தை இயக்குநர் சிம்பு தேவன் தொடங்கினார். வடிவேலு ஹீரோவாக அறிமுகமான முதல் படம் இம்சை அரசன், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
இரண்டாம் பாகத்தை இயக்குநர் சங்கர் தாயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கிய சில நாளிலே திடீரென அப்படியே நின்றுபோனது. வடிவேலு மற்றும் படக்குழுவினர் இடையே மோதல் காரணமாக படப்பிடிப்பு அப்படியே நின்றுபோனது.
 
மிகப் பெரிய பொருட்செலவில் அரங்குகள் அமைத்தும், படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என இயக்குநர் சங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் நடிகர் வடிவேலுவிடம் இயக்குநர் சங்கர் அளித்த புகாரின் பேரில் விளக்கம் கேட்டுள்ளது.