வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 மே 2023 (21:04 IST)

''ரஜினி அரசியலுக்கு வந்தால்''....- சத்ய நாராயண ராவ் கருத்து

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் அவருடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.   இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால்சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினியின்  சகோதரார் சத்ய நாராயண ராவ், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அதன்பின்னர், பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ரஜினியின் ஜெயிலர், லால் சலாம் படங்கள் வெளியாகவுள்ளன. கடவுள் அருளால் அவர் நீண்ட காலம் நலமாக இருக்க வேண்டும். ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். அவர் இனி அரசியலுக்கு வரவாட்டார். அவர் யாருக்கும் ஆதரவும் அளிக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.