செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (15:46 IST)

ஹீரோவுடன் ரொமான்ஸ் பண்ணும் போது தவறி விழுந்த பிரியா வாரியர் - வீடியோ!

ஒரே ஒரு பாடலில் உலக முழுக்க பேமஸ் ஆன மலையாள நடிகை பிரியா வாரியர் ஒரு அடார் லவ் என்ற படத்தில் அவரின் கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம். மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய 'ஒரு அடார் லவ்'. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தது.
 
இதையடுத்து படத்தின் இயக்குனர் ஓமர் லூலு ஒரு அடார் லவ் தோல்விக்கு ப்ரியா வாரியர்தான் காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இவர்மீது இருந்த ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது. இதனால் இன்ஸ்டாகிராமில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ஹீரோவின் முதுகில் எகிறி கட்டிப்பிடிக்கும் போது தவறி கீழே விழுந்துவிட்டார். இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்ஸ் "ஷூட்டிங் போது கவனமாக செயல்படுங்கள்" என அறிவுரை கூறியுள்ளார்.  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya Prakash Varrier