மகளுடன் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர் - குவியும் லைக்ஸ்!

papiksha| Last Updated: திங்கள், 2 டிசம்பர் 2019 (20:00 IST)
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார்.
 
இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி  இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது. அதனையடுத்து  எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஜீவா, அருள்நிதி நடிக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் ருண் விஜய் நடித்து வரும் மாபியா, இந்தியன் 2 , துல்கர் சல்மான் உடன் ஒரு படம் என படு பிசியாக கேப் இல்லாமல் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’  சீரியலில் தனக்கு மகளாக நடித்திருந்த குழந்தையுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் ஏகோபித்த லைக்ஸ்களை பெற்று வருகிறார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Shining Dollஇதில் மேலும் படிக்கவும் :