புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (14:39 IST)

ஜிம்மில் இளம் நடிகருடன் பிரியா பவானி ஷங்கர் - வைரல் புகைப்படம்!

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார்.


 
அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி  இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது. அதனையடுத்து  எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஜீவா, அருள்நிதி நடிக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் ருண் விஜய் நடித்து வரும் மாபியா, இந்தியன் 2 , துல்கர் சல்மான் உடன் ஒரு படம் என படு பிசியாக கேப் இல்லாமல் நடித்து வருகிறார். 
 
இதற்கிடையில் அண்மையில் பிக்பாஸ் கவினின் முன்னாள் காதலி  பிரியா பவானி சங்கர் என்று கூறி புகைப்படங்கள் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் இது பற்றி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார் பிரியா. 


 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், 96 படத்தில் சிறுவயது ராம் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஆதித்யா பாஸ்கருடன் ஜிம்மில் பிரியா பவானி சங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.