ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (07:46 IST)

சிம்புவின் ‘பத்து தல’ நாயகி படத்தில் ப்ரியா பவானிசங்கர்?

சிம்பு தற்போது ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து கொண்டிருக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கிருஷ்ணா இயக்கத்தில் ’பத்து தல’ என்ற படத்தில் நடிக்க சமீபத்தில் சிம்பு ஒப்பந்தம் ஆனார் என்பது தெரிந்ததே. இதில் சிம்புவுடன் முக்கிய கேரக்டரில் கௌதம் கார்த்திக் நடிக்க உள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து தற்போது கௌதம் கார்த்திக் ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது