1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauvery Manickam (Murugan)
Last Modified: புதன், 19 ஜூலை 2017 (19:23 IST)

சினிமாவுக்கு முழுக்குப்போட நினைத்த தமிழ் நடிகை..

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளால், சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்ததாக ப்ரியா ஆனந்த் கூறியுள்ளார். 


 

 
ஜெய் ஜோடியாக ‘வாமனன்’ என்ற தமிழ்ப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி, ஹிந்தியிலும் நடித்து வருகிறார். அசோக் செல்வன் ஜோடியாக இவர் நடித்துள்ள ‘கூட்டத்தில் ஒருவன்’ படம், விரைவில் ரிலீஸாக இருக்கிறது.
 
இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ப்ரியா ஆனந்த், “இந்தப் படத்தின் கதையைக் கேட்பதற்கு முன்பு, சினிமாவை விட்டே விலகிவிடலாம் என முடிவெடுத்திருந்தேன். காரணம், என்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்னைகள். சினிமா இல்லாமல் வேறு ஏதாவது செய்யலாம் என்று நினைத்தபோதுதான் இந்தக் கதையைக் கேட்டேன். உடனே எனது முடிவை மாற்றிக் கொண்டேன். அந்தளவுக்கு வலிமையான கதை இது” என்றார்.