புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (16:20 IST)

ஒருத்தருடன் காதல்... இன்னொருத்தருடன் கல்யாணமா? நடிகையின் ஷாக்கிங் ரியாக்ஷன்!

தமிழில் வெளியான வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தமிழில் கடைசியாக துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்ய வர்மா படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

தொடர்ந்து படங்களில் கவனத்தை செலுத்தி வரும் பிரியா ஆனந்த் 33 வயதாகியும் ஹீரோவுடன் மரத்தை சுற்றி டுயன் ஆடிவரும் கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார். பொதுவாக திரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் சக நடிகர்களுடன் சேர்த்து வைத்து கிசு கிசுக்கப்படுவதெல்லாம் வழக்கமான ஒன்றுதான்.

இது பெரிய சர்ச்சையாக பார்க்கப்படும் வரை பிரபலங்கள் யாரும் பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள். அந்தவகையில் நடிகை பிரியா ஆனந்த் சமீப நாட்களாக கோலிவுட் நடிகர்கள் அதர்வா மற்றும் கௌதம் கார்த்தி என இரண்டு நடிகர்களுடன் ஒரே சமயத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். அதுவும் அதர்வாவை காதலித்து வருவதாவும், கௌதம் கார்த்திகை திருமணம் செய்ய போவதகவும் சமூகவலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வந்தது. இதற்கு பிரியா ஆனந்த், இருவரும் நல்ல நண்பர்கள். இருவருக்கும் நல்ல தோழியாக நான் இருக்கிறேன் வந்தந்திகளை நம்பாதீர் என கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.