திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 மார்ச் 2020 (09:56 IST)

பாலைவனத்தில் சிக்கினாலும் படப்பிடிப்பு நடத்துவோம்: ஜோர்டானில் சிக்கிய பிரித்திவிராஜ்!

ஜோர்டான் நாட்டிற்கு படப்பிடிப்புக்கு சென்ற நடிகர் பிரித்திவிராஜ் மற்றும் படக்குழுவினர் பாலைவனத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

தமிழில் மொழி, ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் பிரித்திவிராஜ். இவரது பிளெஸ்ஸி என்ற படத்திற்கான படப்பிடிப்புக்காக படக்குழு ஜோர்டான் சென்றிருந்தது. ஜோர்டானில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைய தொடங்கியது. தற்போது ஜோர்டானில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து விமான சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதால் படக்குழுவினர் ஜோர்டானிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்.

ஜோர்டானில் பாலைவனப்பகுதியில் கூடாரம் அமைத்திருக்கும் படக்குழுவினர் அருகில் உள்ள இடங்களில் அவ்வபோது படப்பிடிப்புகளையும் நடத்தி வருகிறார்களாம். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள பிரித்திவிராஜ் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.